சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

CID - Sri Lanka Police Department of Prisons Sri Lanka Law and Order
By Sathangani Jun 11, 2025 10:54 AM GMT
Report

புதிய இணைப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (11) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

முறைப்பாடு தொடர்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் பிரதிவாதி சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்டு, பிணை மனுவை நிராகரித்து கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவை இன்று (11) சிறை அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்தது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட அவர், நேற்யை தினம் புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

முதலாம் இணைப்பு

கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய (Thushara Upuldeniya) நாளைய தினம் (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (10) புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் பின்னணியில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்று (09) கைது செய்யப்பட்டார்.

தையிட்டியில் வெடித்த போராட்டம் : கலகமடக்கும் காவல்துறையினர் குவிப்பு - தொடரும் பதற்றம்

தையிட்டியில் வெடித்த போராட்டம் : கலகமடக்கும் காவல்துறையினர் குவிப்பு - தொடரும் பதற்றம்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு

அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த ஒரு கைதியை, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக விடுதலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Order To Commissioner General Of Prisons

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதன் ஒரு பகுதியாக, அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கடந்த ஞாயிறு (08) இரவு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர், நேற்று (09) இரவு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நாளை (11) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை செய்யப்பட்ட சந்தேகநபரை மீண்டும் கைது செய்வதற்காகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் அரசியல் களத்தில் பதவிக்காக பாயும் திடீர் கூட்டணிகள்

தமிழ் அரசியல் களத்தில் பதவிக்காக பாயும் திடீர் கூட்டணிகள்

வடக்கு காணி அபகரிப்பு வர்த்தமானி : கஜேந்திரகுமாருக்கு நீதியமைச்சர் அளித்த பதில்

வடக்கு காணி அபகரிப்பு வர்த்தமானி : கஜேந்திரகுமாருக்கு நீதியமைச்சர் அளித்த பதில்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024