பல்கலைக்கழகங்களில் பகிடிவதை : உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுப்பதற்கு தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு (UGC) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் இன்று (09) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அத்துடன் குறித்த வழிகாட்டுதல்களை செயற்படுத்த தேவையான நிதி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வசதிகளை வழங்குமாறு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அடிப்படை உரிமை மனு
2020ஆம் ஆண்டில் பகிடிவதை காரணமாக உடலுடன் மூளையிலும் காயங்கள் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவரான பசிந்து ஹிருஷான் டி சில்வா அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்தார்.
குறித்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவுவை பிறப்பித்தது.
இந்த உத்தரவுகளை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விசாரிக்க ஜனவரி 14 ஆம் திகதி வழக்கை அழைக்குமாறு உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
