கர்ப்பிணி மான் சுட்டுக்கொலை :காவல்துறை அதிகாரிகள் உட்பட நால்வருக்கு நீதிமன்றின் உத்தரவு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
கலேவெல, ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு காவல்துறை சார்ஜென்ட்கள் மற்றும் இரண்டு பொதுமக்களை நேற்று (26) தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில், எதிர்வரும் (01) திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தேக நபர்கள் தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர், தம்புள்ளை நீதவான் துலாஞ்சலி சித்துமினி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சந்தேக நபர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
சந்தேக நபர்களில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் நீதவானிடம் தெரிவித்துள்ளனர். கர்ப்பிணி மானைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட 03 துப்பாக்கிகள் நீதவான் நீதிமன்றத்தில் மு்படுத்தப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
