நாமலுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னியாகியிருந்தார்.
மீண்டும் விசாரணை
அதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைப்பதற்குத் திகதி நிர்ணயிக்கப்பட்டது.

நாட்டில் ரக்பியை ஊக்குவிப்பதாக தெரிவித்து இந்திய கிரிஷ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட 70 மில்லியன் ரூபாவை தவறாகப் பயன்படுத் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |