சுவர்ணவாஹினி விவகாரம்! பொலிஸ்மா அதிபருக்கு கொடுக்கப்பட்ட உத்தரவு
srilanka
court
By Vasanth
சுவர்ணவாஹினி நிறுவனத்தின் பங்குகள் விற்பனை தொடர்பிலான விசாரணை முழுமையற்றது என சட்டமா அதிபரினால் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் விசாரணை அறிக்கை மீண்டும் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த பங்குகள் விற்பனை தொடர்பில் மேலும் விசாரணை நடத்துமாறும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.