கொழும்பில் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத பொது மக்கள்! கவலையில் சுகாதாரத்துறையினர்

Covid-19 Corona Virus Colombo #Sri Lanka
By Vasanth Dec 31, 2020 01:59 AM GMT
Report

பொதுமக்கள் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள தயங்குவதே தற்போது சுகாதார அதிகாரிகளுக்கு பாரிய பிரச்சினையாகியிருப்பதாக சுகாதாரத் துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

பிசிஆர் பரிசோதனைகளை நடத்துவதற்காக தற்போது கொழும்பில் ஆறு அணிகள் செயற்படுகின்றன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், கொழும்பின் குறைந்த மற்றும் மிகக் குறைந்த ஆபத்து நிறைந்த பகுதிகளிலும் சுகாதாரப் பணியாளர்கள் விரைவான என்டிஜென் சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பில் தொடர்ந்தும் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதால் இதுவரை கண்டறியப்பட்டாத புதிய தொற்றுக்களையும் கண்டறிய அதிகாரிகள் முயற்சிப்பார்கள் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய அனைத்து அதி ஆபத்து பகுதிகளும் இப்போது சோதனை செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து தற்போது குறைந்த இடர் பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் கவனத்தை மாற்றியுள்ளனர். இதன்படி கொழும்பில் நாளொன்றுக்கு 500 என்டிஜென் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

நடமாடும் சேவையில் ஈடுபட்டு வரும் சுகாதார அதிகாரிகள், குறைந்த ஆபத்துள்ள பகுதிகளுக்குச் செல்லும்போது, ஒரு குடும்பத்திற்கு ஒரு உறுப்பினரை என்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர்.

இதன்போது அவருக்கு தொற்று கண்டறியப்பட்டால் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுகிறார்கள். சோதனைகளை நடத்துவதற்காக தற்போது கொழும்பில் ஆறு பி.சி.ஆர் அணிகள் செயற்படுகின்றன.

எனினும் பொதுமக்கள் தம்மை சோதனை செய்துகொள்ள தயங்குவதே தற்போது சுகாதார அதிகாரிகளுக்கு பாரிய பிரச்சினையாகியிருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். Tags : #Corona Virus #Covid-19 #Colombo #Sri Lanka

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி