மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - தொற்றுநோயியல் திணைக்களம் எச்சரிக்கை
கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை பூச்சியமாக இருந்தாலும், நாளாந்தம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாகவே பதிவாகி வருவதாக சுகாதாரத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், சில நாட்களுக்குப் பின்னர், நேற்று (20) நாட்டில் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா இறப்பு
அதன்படி, இலங்கையில் பதிவான மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 16,793 என்று தொற்றுநோயியல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று, இரண்டு பெண்கள் கொரோனா நோய்த்தொற்றால் இறந்தனர், அவர்களில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்ட பெண் என திணைக்களம் தெரிவித்தள்ளது.
எவ்வாறாயினும் பொது இடங்களில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
