இலங்கையின் கொவிட் பலி அதிகரிப்பு
srilanka
death
covid 19
By Vasanth
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 03 பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரும், கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவரும், முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவரும், தெற்கு களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவரும், தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஆணொருவரும் மற்றும் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவருமே இன்று உயிரிழந்துள்ளனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி