இன்றைய கொவிட் நிலவரம் - புதுப்பிக்கப்பட்ட அறிக்கை வெளியானது
covid
sri lanka
death
patient
By Vanan
இலங்கையில் மேலும் 11 கொவிட் மரணங்கள் நேற்று(12) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,174 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 07 ஆண்களும், 04 பெண்களும் உள்ளடங்குவதாக இன்று வெளிவந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான மேலும் 594 பேர் இன்று இதுவரை, அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 594,319 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 11,445 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையோர் சுகமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி