கொவிட் தொற்றால் ஆடைத் தொழிற்சாலைக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி - பஸிலிடம் எடுத்துரைப்பு
கொவிட் தொற்றுநோயால் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட ஆடை உற்பத்திக்கான ஓடர்களை தங்களால் வழங்க முடியவில்லை என்று ஆடை தொழிற்சாலை உரிமையாளர்கள் நிதி அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளனர்.
ஏற்றுமதி துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டதாலும், கொவிட் காரணமாக முதலீட்டு வலயங்களைச் சுற்றி தங்குமிடம் இல்லாததாலும், ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்ததால் குடும்பங்களின் சமுர்த்தி கொடுப்பனவு குறைக்கப்பட்டதாலும் சில ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலைக்கு வர தயங்கினர் என்பது தெரியவந்தது.
ஆடைத் தொழிற்சாலைகளில் சுமார் 35000 பேர் வேலை செய்கிறார்கள். கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் மட்டும் 10,000 ஊழியர்களின் பற்றாக்குறை இருப்பதாக ஆடை தொழிற்சாலை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை அடுத்த ஐந்து மாதங்களில் ஆடை ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், ஆறு பில்லியன் ரூபாவுக்கு மேல் சம்பாதிக்கவும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.