அனைத்து பிரதான வைத்தியசாலைகளிலும் கொவிட் தடுப்பூசி - 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முக்கிய தகவல்
covid
vaccine
sri lanka
people
all hospitels
By Vanan
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அனைத்து பிரதான வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி மத்திய நிலையங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
முதியவர்கள் வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் போது, விண்ணப்ப படிவத்தை நிரப்பிக்கொண்டு வருவதுடன், தேசிய அடையாளஅட்டையை எடுத்து வருமாறும் அவர் கோரியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி