கர்ப்பிணித் தாய்மாருக்கு கொவிட் தடுப்பூசி - தயாராகிறது திட்டம்
கர்ப்பிணித் தாய்மாருக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக விசேட வைத்தியர் டொக்டர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கர்ப்பிணித் தாய்மாருக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்துவதற்கான சுற்று நிருபம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஏதேனும் உடல் நிலை பாதிப்புக்கள் காணப்படுகின்ற கர்ப்பிணித் தாய்மாருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக கர்ப்பிணித் தாய்மார்கள் அவசரப்பட்டு, வைத்தியசாலைகளுக்கு வர வேண்டாம் என விசேட வைத்தியர் ரஞ்ஜித் பட்டுவத்துடாவ தெரிவித்தார்.
அதற்கான அறிவிப்பு கர்ப்பிணித் தாய்மாருக்கு தெரிவிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.