பின்னடைவை சந்தித்தது கொவிட் தடுப்பூசி திட்டம்
இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக கொரோனா தடுப்பூசி திட்டம் பின்னடைவை சந்தித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் எந்தவொரு மாவட்டத்திலும் தடுப்பூசி போடும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக தடுப்பூசி திட்டங்கள் பாதிக்கப்பட்டதா? என செய்தியாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார். இதற்கு தொடர்ந்தும் பதிலளித்த அவர்,
மேற்கு மாகாணம் மற்றும் இரத்னபுரி மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்கள் மோசமான வானிலை காரணமாக சில சிக்கல்களை எதிர்கொண்டன.
நீரில் மூழ்கிய சாலைகள் காரணமாக அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மையங்களுக்கு செல்ல முடியவில்லை.
குருநாகல் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்களின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இயற்கையின் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது வெளிப்படையானது.
அதே நேரத்தில், மழை தொடர்ந்து பெய்யும் தடுப்பபூசி மையங்களுக்கு மக்களை அழைத்துச் சென்று, அவர்களை சிக்கலில் சிக்க வைக்க முடியாது என்றார்.