இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்
Government Of Sri Lanka
Sri Lanka Banks
Aswasuma
By Thulsi
2026 ஜூலை மாதத்திற்கான அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு இன்று (31) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.
முதியோர் கொடுப்பனவு
அதன்படி, முதற்கட்டத்தின் கீழ் 621,638 முதியோர்களுக்காக 3,108,190,000 ரூபா நிதியும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 77,324 முதியோர்களுக்காக 386,620,000 ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களிலும் 698,962 பயனாளிகளுக்கு மொத்தமாக 3,494,810,000 ரூபா வழங்கப்படவுள்ளது.
பயனாளிகள் இன்று முதல் தங்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்