இலங்கையில் கொரோனா தரவுகள் கூடிக் குறைய காரணம் என்ன? வெளியானது தகவல்
மாவட்ட ரீதியில் பெற்றுக் கொள்ளப்படும் கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான தரவுகளை உறுதிப்படுத்தல் மற்றும் பதிவு செய்வதில் ஏற்படுகின்ற தாமதமே நாளாந்தம் தொற்று உறுதிப்படுத்தப்படுவோர் எண்ணிக்கை கூடி குறைவதற்கு பிரதான காரணியாகும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர் இலங்கையில் இது வரையில் 30 வயதுக்கு மேற்பட்டோரில் தெரிவுசெய்யப்பட்ட குழுவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் நூறு வீதம் நிறைவடைந்துள்ளன.
இதேபோன்று இந்த தரப்பினருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் 49 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,