அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாது - பதவிகளை இராஜினாமா செய்தார் ஆனந்த பாலித்த
resign
cpc union
ananda palitha
By Vanan
சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக ஆனந்த பாலித்த (Ananda Palitha) அறிவித்துள்ளார்.
அத்துடன், தேசிய ஊழியர் சங்கத்தில் தாம் வகித்த அனைத்துப் பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளதாகவும் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கோட்பாட்டைக் கொண்ட தொழிற்சங்கவாதி என்ற அடிப்படையில் தம்மால் அரசாங்கத்துடனோ அல்லது எந்தவொரு கட்சியுடனோ இணைந்து செயற்பட முடியாது என அவர் கூறியுள்ளார்.
உள்ளூர் வளங்களை விற்கும் நடவடிக்கையில் தேசிய ஊழியர் சங்கம் தொடர்ந்தும் மௌனம் காப்பதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.