இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் மரணம்!
Cricket
Indian Cricket Team
By pavan
மும்பை அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடிய மூத்த வீரரான ரஷ்டம் கூப்பர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த மிக மூத்த கிரிக்கெட்டரான ரஷ்டம் கூப்பர், 1944 ஆம் ஆண்டு ரஞ்ச கிண்ண போட்டியின் இறுதியில் சதமடித்து மும்பை அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.
இவர் கடந்த டிசம்பர் மாதம் 100 வயதை கடந்தார்.
முதல் தர கிரிக்கெட் வீரர்

மும்பையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் ரஷ்டம் கூப்பர் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூங்கிய நிலையில் இவரது உயிர் பிரிந்தது.
உலகிலேயே உயிருடன் இருந்த மூத்த முதல் தர கிரிக்கெட் வீரராக இருந்த ரஷ்டம் கூப்பர் சுமார் 10 ஆண்டு காலம் 22 முதல் தர கிரிக்கெட் போட்டிகளை விளையாடி மூன்று சதம், 10 அரைசதங்கள் என 1,205 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி