வெளிநாடு பறக்க முயன்ற குற்றவாளி கட்டுநாயக்கவில் அதிரடி கைது!
பாணந்துறை காவல் பிரிவில் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக காவல்துறையினால் தேடப்பட்டு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று(26) குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மலேசியாவுக்குத் தப்பிச் செல்ல விமான நிலையத்திற்கு வந்தபோது, முக அங்கீகார அமைப்பு மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
கடந்த 11 ஆம் திகதி பாணந்துறை காவல் பிரிவில் உள்ள ஹிரான பகுதியில் ஹசித துலாஜ் என்ற நபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நபராக ரமேஷ் பேஷல (28) அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மலேசியாவுக்குப் புறப்படும் ஏர் ஏசியா விமானம் AK-44 இல் ஏறுவதற்காக வந்தபோது, இன்று முற்பகல் 10:40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, பாணந்துறை காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
