ஈஸ்டர் தாக்குதலின் குற்றவாளிகளை மன்னிக்கத் தயார் : மல்கம் ரஞ்சித்
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருக்கும் குற்றவாளிகள் அவர்கள் செய்த குற்றத்தினை ஏற்று மனம் திருந்தினால் அவர்களை மன்னிக்க முடியும் என்று கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இடம்பெற்ற தேவாலய ஆராதனையின் போதே அவர் மேற்கணடவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் பொறுப்பை ஏற்று வருந்தினால் அவர்களை மன்னிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
தென்னாபிரிக்காவில் இனக்கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களின் தவறுகளை எண்ணி மனம் திருந்திய போது தென்னாபிரிக்காவின் அப்போதைய அதிபராக இருந்த நெல்சன் மண்டேலா மனம் திருந்தியவர்களை மன்னித்தார்.
உண்மையை மட்டுமே
அதேபோன்று ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குக் காரணமானவர்களும் மனம் திருந்தினால் அவர்களையும் மன்னிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
"ஈஸ்டர் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்படுபவர்கள் அவர்கள் வகிக்கும் பதவியை இராஜினாமா செய்து நேர்மையை வெளிப்படுத்த வேண்டும்.
நேர்மை என்பது அரசியல்வாதிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளாது. உண்மையை கூற பயப்பட வேண்டாம்.
திருச்சபை என்றுமே உண்மையை மட்டுமே தெரிந்துகொள்ள விரும்புகிறது ”என்றார்.