சனல் 4 இல் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்யுங்கள் : சம்பந்தன் சீற்றம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 இல் குற்றம்சாட்டிய அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று (10ஆம் திகதி) தெரிவித்தார்.
இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தாக்குதல் தொடர்பான விசாரணை மற்றும் கைது செய்யப்படாமல் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு நீதி கிடைக்காது.
கைது செய்து விசாரணை
சனல் 4 இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை சர்வதேச தலையீட்டுடன் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மேலும் தேவையான விபரங்களை தொலைக்காட்சியில் இருந்து பெற வேண்டும் என்றும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்க ஒரு தரப்பினர் திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொதுவான கருத்து நிலவுவதாகவும், இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
தகுந்த ஆதாரம்
பல ஆதாரங்களுடன் சனல் 4 தொலைக்காட்சி உயிர்த்த ஞாயிறு தொடர்பான தகவல்களை சர்வதேச சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. . இது தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கருத்து பல தரப்பினராலும் முன்வைக்கப்படுவது மிகவும் சாதகமான செயற்பாடாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.