பிள்ளையானுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை : மொட்டு கட்சி எடுத்துள்ள தீர்மானம்
அண்மையில் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈஸ்டர் தாக்குதல் மற்றும் லசந்த கொலை தொடர்பில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில்லை என மொட்டு கட்சி தீர்மானித்துள்ளது.
மொட்டு கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை எனவும், எனவே பிள்ளையானுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சி உத்தேசித்துள்ளதா எனவும் கொழும்பு ஊடகமொன்று மொட்டு கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திடம் கேட்டது.
ஒழுக்காற்று நடவடிக்கை
இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிள்ளையான் மொட்டு கட்சியில் அங்கம் வகிக்காததால், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சிக்கு அதிகாரம் இல்லை. தன்மீதான குற்றச்சாட்டுக்களை பிள்ளையான் மறுத்துள்ளதாகவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.