பௌத்த மகாசங்க பையில் மியாவ்! வெளிப்பட்டது சங்க சாசன பூனைக்குட்டி
Let the Cat Out of the Bag என ஆங்கிலத்தில் மரபுத்தொடர் உண்டு. பூனைக்குட்டியை வெளியில் விடுங்கள் என இதன் அர்த்தப்படுத்தல் இருப்து போவே நேற்று சிறிலங்காவின் பௌத்த மகா சங்க மாநாட்டு பையில் இருந்து 10 அம்ச சங்க சாசன பூனைக்குட்டி வெளிப்பட்டுவிட்டது.
கொழும்பில் உள்ள அகில இலங்கை பௌத்த கொங்கிரஸ் தலைமையகத்தில் வெளிப்பட்ட இந்த சங்க சாசன பூனைக்குட்டி அநுர அரசாங்கத்தை நோக்கி டீலா நோ டீலா என மியாவ் என்கிறது.
இவ்வாறான மியாவுதலுக்கு பின்னால் ஜேவிபி மேற்பார்த்த சிஸ்ரம் சேஞ் மொடல் தேசியமக்கள் சக்தியின் பங்கை அறிந்துகொள்ள நுண்ணறிவுதேவை. இந்த 10 அம்சங்களுடனான சங்கசாசனம் அரசதலைவர் அநுரகுமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்படவும் உள்ளது.
10 அம்சங்களைக் கொண்ட இந்த சங்கப் பிரகடனத்தில் முதலாவது பிரகடனமாக எங்க தாத்தா வீட்டில் ஒரு யானை இருந்தது என்ற மகாவம்ச கதை இருந்தது.
இதற்கும் அப்பால் ஏனைய 9 அம்சங்களும் இலங்கையில் பௌத்தத்துக்கு முன்னுரிமை! பௌத்தத்துக்கு முன்னுரிமை! பௌத்தத்துக்குத்தான் முன்னுரிமை என மதம் பிடித்து அலறுகிறன்றன.
மனிதகுலத்துக்கு அறிவொளியை ஏற்படுத்திய காலப்பகுதியில் மேற்குலகில் மதத்தையும் அரசையும் பிரிக்கும் செக்யூலரிஸம் எனப்படும் அரசையும் மதத்தையும் பிரிக்கும் மதச்சார்பின்மையும் உருவாகியது.
இந்த கருத்தியல்தான் இன்றும் அமெரிக்கா பிரான்ஸ் உட்பட்ட நாடுகளின் அரசியலயமைப்பின் அடிப்படையும் கூட அமெரிக்காவில் அல்லது பிரான்சில் அரசாங்கம் ஒரு மதத்தின் அடிப்படையில் தேவாலயத்தை நிர்மாணிக்க முடியாது.
அரசும் மதமும் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் பல்வேறு சமய சார்புடைய சமூகங்களை ஒரே அரசியல் அலகில் இணைக்கும் இந்த கோட்பாடு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு அரசாங்கத்துக்கு முக்கியம்.
ஆனால் இலங்கைக்கு இந்த மதச்சார்பற்ற தன்மைக்கு எதிராக பௌத்தத்துக்கு முன்னுரிமை என்ற விடயம் இன்றுவரை பெரும் சாபமாக உள்ள நிலையில் நேற்றைய மகாசங்க தீர்மானங்கள் இந்தவிடயத்தில் ஒரு 2.0 நிலையை உருவாக்கத்தலைப்படும் பின்னணியில் இவ்வாறு எல்லாம் நடைபெறவேண்டும் என்ற எதிர்பார்புடன் அனுர தரப்பு மாத்தியோசி பாணி ஆட்டத்தை நடத்துகின்றதா என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில்இந்த விடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |