சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் எரிபொருள் விலை : இலங்கையிலும் தாக்கம் செலுத்துமா..!
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து, ஒரு பரல் கச்சா எண்ணெய் விலை பத்து சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கின் இராணுவ நிலைமை எரிபொருள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கத்திய நாடுகளுக்கான எரிபொருள் தேவை
மேலும், குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், மேற்கத்திய நாடுகளுக்கான எரிபொருள் தேவை அதிகமாக இருப்பதும் இதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல், ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா இடையேயான போர்சூழ்நிலை நீடித்தால், செங்கடல் ஊடான கப்பல் போக்குவரத்துக்கு இடையூறாக அமையும்.
கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும்
இதனால் எரிபொருள் போக்குவரத்து பாதைகள் தடைப்பட்டு கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பானது இலங்கையிலும் தாக்கத்தை செலுத்துமென தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு இலங்கையில் எரிபொருள் விலை அதிகரித்தால் மீண்டும் பொருட்களின் விலைகள் உயர்வடைவதுடன் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுக்கநேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |