மசகு எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம்
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நேற்று (04) 8% சரிந்து, 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுநோயின் காலத்தில் இருந்த மிகக் குறைந்த விலையை பதிவு செய்துள்ளது.
அமெரிக்க டொலராக வீழ்ச்சி
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.59 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 64.96 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த வீழ்ச்சி உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மிகப் பெரிய வர்த்தகப் போர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால் சில பொருட்களின் விலை கடுமையாக அதிகரிக்கும் என்று தெரியவந்திருக்கிறது.
ஏனைய நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு பதிலடியாக அது அமையும் என டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும் பல பொருட்களுக்கு வரி விதிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.
இது மிகப் பெரிய வர்த்தகப் போருக்கு வழிகோலும் என்று உலக நாடுகள் அஞ்சுகின்றன. ட்ரம்ப்பின் வரிகளால் வாகன உற்பத்தி, உலோகங்கள், மருந்துப் பொருட்கள், மதுபானம், மரக்கட்டைகள், மின்-தகடுகள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகள் பாதிக்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 4 மணி நேரம் முன்
