ட்ரம்பின் கருத்துக்கு மத்தியில் மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலைகள்
ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பJ குறித்து அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ள காலக்கெடுவை தொடர்ந்து எண்ணை விலைகள் மீண்டும் உயர் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி அமெரிக்கா கச்சா எண்ணையும் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் 114 டொலர் என்ற விலை வரம்பை அடைந்துள்ளது.
மேலும், ஒரு பீப்பாய் பிரென்ட் விலையனது 2.35% உயர்ந்து 114.16 டொலர் என்ற விலை வரம்பை அடைந்துள்ளது.
நரகத்தில் ஈரான் வாழும்
ஈரான் நீரிணையை திறக்காவிட்டால், அது ”நரகத்தில் வாழும்” என்று வசவுச் சொற்கள் நிறைந்த சமூக ஊடகப் பதிவு ஒன்றில் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தார் .

அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது குண்டு வீசுவதாகவும் மிரட்டினார்.
அதனைத் தொடர்ந்து ட்ரம்ப், மேலதிக விளக்கம் ஏதுமின்றி, “செவ்வாய்க்கிழமை, கிழக்கு நேரப்படி இரவு 8:00 மணி!” என்று பதிவிட்டார்.
இவ்வாறான பின்னணியில் எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மூலம் ஈரான் இந்த நீரிணையை திறம்பட மூடி வைத்துள்ளது. இந்தக் கடல்வழிப் பாதை பாரசீக வளைகுடாவை உலகச் சந்தைகளுடன் இணைக்கிறது. போருக்கு முன்பு, உலகளாவிய விநியோகத்தில் சுமார் 20% இந்த வழியாகவே சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.