ஈரான் - அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்களால் விலை உயர்வை சந்திக்கும் கச்சா எண்ணெய்
மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்த பதற்றத்தை தொடர்ந்து எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து உயர்வு மட்டத்தை அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் விலை தற்போது நிலவரப்படி ஒரு பீப்பாய்க்கு 1.18 டொலர் (1.3 சதவீதம்) அதிகரித்து 91.67 டொலராக பதிவாகியுள்ளது.
அதே நேரத்தில் அமெரிக்க டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 1.27 டொலர் (1.48 சதவீதம்) அதிகரித்து 87.03 91.67 பதிவாகியுள்ளது.
பதிலடி ஏவுகணைப் தாக்குதல்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதிலடி ஏவுகணை தாக்குதல் நகர்வுகள் இது ஒரு போர் நிறுத்த நிலையை கடந்து செல்வதாக ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு சென்ற ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒரு உடன்பாட்டை ஏற்படுத்த, கட்டார் மற்றும் ஓமான் உள்ளிட்ட மத்தியஸ்தர்கள் மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.
எண்ணெய் விலையால் ஏற்படும் பணவீக்கம் குறித்து வர்த்தகர்கள் கவலை கொண்டதால், உலகளாவிய கடன் பத்திர விற்பனை தீவிரமடைந்து வரும் நிலையில், ஜப்பானின் முக்கிய 10 ஆண்டு காலப் பத்திர வருவாய், 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக செவ்வாயன்று 3 சதவீத தடையை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்திய கிழக்கு நெருக்கடி உலகளவில் விலை அழுத்தங்களைத் தூண்டி வருவதால் , மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதால், டோக்கியோ மற்றும் சிட்னியிலிருந்து நியூயார்க் மற்றும் லண்டன் வரை பத்திர வருவாய்கள் கடுமையாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |