தமிழர் பகுதியில் நேர்ந்த கொடூரம் - கணவனின் வாள்வெட்டு தாக்குதல் மனைவி பலி
Sri Lanka Police
Mullaitivu
Sri Lanka Police Investigation
Crime
By Thulsi
கணவன் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த மனைவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் நேற்று (31.08.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மனைவி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கணவனும் காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகைள புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15