ஜனாதிபதியின் செயலாளருக்கு எதிராக சிஐடியில் மேற்கொள்ளப்படவுள்ள முறைப்பாடு!

CID - Sri Lanka Police Sri Lanka Law and Order
By Shalini Balachandran Sep 01, 2026 05:56 AM GMT
Report

சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பெருமளவிலான முறைகேடு ஒன்றை மறைப்பதற்குத் தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

ஊடகமொன்றின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்கள் அடங்கிய கொள்கலன் (Container) ஒன்று தொடர்பிலேயே இந்தச் சிக்கல் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர்தரப் பரீட்சை பௌதிகவியல் வினாத்தாளில் சிக்கல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

உயர்தரப் பரீட்சை பௌதிகவியல் வினாத்தாளில் சிக்கல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இரண்டாவது பரிசோதனை

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “குறித்த கொள்கலனுக்குத் தேவையான இறக்குமதி அனுமதிப்பத்திரம் இல்லாததால், அது சுங்கத் திணைக்களத்தின் சிவப்புக் சனல் (Red Channel) ஊடாகப் பரிசோதிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளருக்கு எதிராக சிஐடியில் மேற்கொள்ளப்படவுள்ள முறைப்பாடு! | Mp Alleges President Secretary In Customs Coverup

முதலாம் குழு அதில் தவறேதும் இல்லை எனக் கூறிய போதிலும் அன்றைய காலத்தில் சுங்க மேலதிக பணிப்பாளராகக் கடமையாற்றிய தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் தலைமையிலான இரண்டாவது குழு அதனை மீண்டும் பரிசோதித்தது.

இரண்டாவது பரிசோதனையின் போது சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 7 வாகன ஆசனங்கள் மட்டுமே இருந்ததாகக் கூறி, அவற்றை மட்டும் அரசுடமையாக்கப் பரிந்துரைக்கப்பட்டது.

22வது திருத்தம் : சட்டத்தரணிகளின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்

22வது திருத்தம் : சட்டத்தரணிகளின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்

உள்நாட்டு விசாரணை

சுங்கத் திணைக்களத்தின் உள்நாட்டு விசாரணைப் பிரிவினர் நடத்திய மூன்றாவது பரிசோதனையில், சுங்கத்திற்கு அறிவிக்கப்படாத 45 வகையான 600 க்கும் மேற்பட்ட பொருட்கள் அக்கொள்கலனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

அதில் 130 வாகன ஆசனங்கள் மற்றும் பெருமளவிலான டயர்கள் இருந்ததாக சானக்க வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளருக்கு எதிராக சிஐடியில் மேற்கொள்ளப்படவுள்ள முறைப்பாடு! | Mp Alleges President Secretary In Customs Coverup

இந்த பாரதூரமான ஊழல் தொடர்பான அறிக்கைகள் தற்போது சுங்கத் திணைக்களம் மற்றும் நிதி அமைச்சகத்திலிருந்து காணாமல் போயுள்ளதாகவும், ஆனால் தன்னிடம் அந்த ஆவணங்களின் பிரதிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எதிர்வரும் புதன்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) அல்லது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அர்ஜுன் மகேந்திரனை அழைத்துவருவதில் எந்த சட்டத்தடையும் இல்லை! சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

அர்ஜுன் மகேந்திரனை அழைத்துவருவதில் எந்த சட்டத்தடையும் இல்லை! சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016