பெற்றதாய் பிள்ளைகளுக்கு செய்த கொடுமை
குருணாகல் வாரியபொல அம்பகடவர என்ற பிரதேசத்தில் தாய் ஒருவர்,தனது ஐந்து பிள்ளைகளை காட்டுப் பகுதியில் கைவிட்டு, ஆண் ஒருவருடன் சென்ற சம்பவம் நடந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காடு மண்டிய இடம் ஒன்றில் ஐந்து பிள்ளைகள் அழும் சத்தம் கேட்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்ற பொலிஸார் பிள்ளைகளை மீட்டுள்ளனர். மீட்கப்படும் போது
அந்த பிள்ளைகள் இரண்டு தினங்களாக நீர், ஆகாரம் இன்றி இருந்துள்ளனர் என பொலிஸார் கூறியுள்ளனர். இந்த பிள்ளைகள் இரண்டு வயது முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள்.
இந்த பிள்ளைகளின் தந்தை மதுவுக்கு அடிமையானவர் எனவும் அவர் மது போதையில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, தாய் பிள்ளைகளை கைவிட்டு, 35 வயதான மற்றுமொரு ஆணுடன் சென்றுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸாரால் மீட்கப்பட்ட பிள்ளைகள் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் வரை, பிள்ளைகளை அவர்களின் பெரியம்மாவின் பொறுப்பில் ஒப்படைத்துள்ளதாக வாரியபொல பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.