எந்த வீரரும் செய்யாத மாபெரும் ஐ.பி.எல் சாதனையை செய்த தோனி
MS Dhoni
Cricket
IPL 2025
By Raghav
ஐ.பி.எல் (IPL) தொடரில் 30ஆவது போட்டியில் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் அதிரடி பினிஷிங், ஸ்டம்பிங், ரன் அவுட் என அனைத்திலும் அசத்திய சென்னை அணித் தலைவர் எம்.எஸ். தோனி (MS Dhoni) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆட்டநாயகன் விருது
இதன்மூலம் 43 வயதான தோனி, ஐ.பி.எல் வரலாற்றில் ஆட்டநாயகன் விருதைப் பெற்ற மிக வயதான வீரர் சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் பிரவீன் தாம்பே 42 வயது 208 நாட்களில் ஆட்ட நாயகன் விருது பெற்றதே சாதனையாக இருந்தது.
6 ஆண்டுகளுக்கு பிறகு தோனிக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்துள்ளது. இதற்கு முன்பு 2019இல் டெல்லி கெப்பிடலுக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் அவர் இந்த விருதை பெற்று இருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி