வெற்றிப்பாதைக்கு திரும்புமா சி.எஸ்.கே...! சற்று நேரத்தில் ஆரம்பிக்கும் போட்டி
Chennai Super Kings
Delhi Capitals
Chennai
Sports
By Dilakshan
ஐபிஎல் (IPL) தொடரில் 17ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிகள் மோத உள்ளன.
இன்றைய (05.04.2025) போட்டி பிற்பகல் 3 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் (Chennai Chepauk) ஆரம்பமாகவுள்ளது.
சென்னை அணித் தலைவர் ருதுராஜ் கெயிக்வாடுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
புள்ளிப்பட்டியலில் 8வது இடம்
சென்னை அணி இதுவரை 3 போட்டிகளில் 1 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
அதேவேளையில், டெல்லி அணி ஆடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
மேலும், புள்ளிப்பட்டியலில் பஞ்சாப், டெல்லி, பெங்களூரு, குஜராத் அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
