சென்னை - குஜராத் அணிகளுகிடையிலான மோதல்: இரண்டாவது வெற்றி யாருக்கு..!
சென்னை சூப்பர் கிங்ஸ், மற்றும் குஜராத் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று(26) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
இரு அணிகளுமே அணியின் இரண்டாவது வெற்றியை எதிர்ப்பார்த்து களமிறங்கவுள்ளன.
நடப்பு சாம்பியன் சென்னை அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
2-வது வெற்றி
குஜராத் அணி தனது சொந்த மண்ணில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
இரு அணிகளுமே பலமான அணிகளாக பார்க்கப்படுவதால் இந்த போட்டியானது விறுவிறுப்பு இல்லாமல் நடைபெறும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 தடவையும் வென்று இருக்கின்றன.
புதிய தலைமை
கடைசியாக நடந்த 2 மோதலிலும் (கடந்த ஆண்டு இறுதிப்போட்டி, முதலாவது தகுதி சுற்று) சென்னை அணியே வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையை நன்கு அறிந்த தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன், விஜய் சங்கர், சாய் கிஷோர் ஆகியோர் குஜராத் அணியில் அங்கம் வகிப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என கூறப்படுகின்றது.
மேலும் இரு புதிய தலைவர்களான ருதுராஜ் மற்றும் சுப்மன் கில் தலைமையில் இவ்விரு அணிகள் முதன்முறையாக மோதுவதால் இப்போட்டியின் மீது எதிர்ப்பார்ப்புகள் அதிகம் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |