சிஸ்கேவின் வெற்றி நடை தொடருமா! சென்னை-பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐபில் தொடரானது இறுதிகட்டத்தை நோக்கி முன்னெறிவரும் நிலையில், இன்று(1) சென்னை அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 17வது சீசன் நடைபெற்று வருகின்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த சீசனில், இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
5 முறை சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
புள்ளிப்பட்டியல்
அந்த அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் அணியானது இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளி பெற்றுள்ளது. இனிவரும் ஒவ்வொரு போட்டிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அணிக்கும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |