மும்பையை பந்தாடி வெற்றியுடன் கணக்கை ஆரம்பித்தது டோனி படை
சென்னையில் இன்று(23) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸிற்கு(Mumbai Indians) எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்(Chennai Super Kings) 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
முன்னதாக நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை அணி களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடியது.
அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மாவை ஓட்டங்கள் எதுவும் எடுக்க விடாமலேயே பெவிலியின் திருப்பினார் சென்னை பந்து வீச்சாளர் அகமட்.ரோகித் சர்மாவுடன் களமிறங்கிய றியானையும் 13 ஓட்டங்களுடன் வெளியேற்றினார் அகமட்.
சொற்ப ஓட்டங்களில் சொதப்பியது மும்பை
இவ்வாறு மும்பை இந்தியன்ஸ் துடுப்பாட்ட வீரர்களை சென்னை அணியின் அகமட், மற்றும் நூர் அகமட் இருவரும் நிலைத்து நிற்க விடாமல் வெளியேற்றிக் கொண்டிருந்தனர்.
இறுதியில் மும்பை இந்தியன்ஸ் 09 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. அவ்வணி சார்பாக திலக்வர்மா31, அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் 29, டீபக் சாகர் 28 ஓட்டங்களை கூடுதலாக பெற்றனர்.
பந்துவீச்சில் கலக்கிய நூர் அகமட்ட் 04,கலீல் அகமட்03 விக்கெட்டுக்களை கொய்தனர்.
அதிரடி காட்டிய ருதுராஜ் கெய்க்வாட்
தொடர்ந்து 156 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.ராகுல் திரிபாதி 02 ஓட்டங்களுடன் நடையை கட்டினார்.
எனினும் பின்னர் வந்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரசீன் ரவீந்திரா இருவரும் அதிடி காட்ட அணியின் ஓட்ட எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.எனினும் 23 பந்துகளில் 03 சிக்ஸர், 06 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்களை பெற்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார்.
நிலைத்து நின்ற ரசீன் ரவீந்திரா
பின்னர் வந்த சிவம் டுபே 09, டீபக் கூடா 03, சாம் கரன் 04,ஜடேஜா 17 என அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் விழுந்த போதிலும் இறுதிவரை களத்தில் நின்ற ரசீன் ரவீந்திரா 65 ஓட்டங்களை பெற்று அணி வெற்றி பெற உதவினார்.
இறுதியில் சென்னை அணி 19.1 ஓவரில் 06 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்று 04 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. ஆட்டநாயகனாக 04 விக்கெட்டுக்களை கொய்த நூர் அகமட் தெரிவானார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்