மட்டக்களப்பில் யுத்த காலத்தின்போது நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

Batticaloa Sri Lankan Peoples Eastern Province
By Laksi Apr 26, 2024 02:34 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலத்தின்போது நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை ஒன்று மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தின் குருமண்வெளி துறையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையிலான பேருந்து சேவையே ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - படுவாங்கரைப் பகுதிக்கும் எழுவாங்கரைப் பகுதிக்குமான பிரதான போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாக குருமண்வெளி – மண்டூர் படகுப் பாதை இடம்பெற்று வருகின்றது.

தமிழீழ விடுதலை புலிகளை வைத்து ஆட்சியை கைப்பற்றிய சிங்கள அரசியல்வாதிகள்

தமிழீழ விடுதலை புலிகளை வைத்து ஆட்சியை கைப்பற்றிய சிங்கள அரசியல்வாதிகள்

பேருந்து போக்குவரத்து சேவை

இப்படகு பாதையில் பயணம் செய்யும் பயணிகள் மட்டக்களப்புக்குச் செல்வதாயின் நிறைய சிரமத்தின் மத்தியில் அதிக செலவு செய்து தமது போக்குவரத்துக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் யுத்த காலத்தின்போது நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் | Ctb Bus Service In Batticaloa

இந்நிலையில், இவ்விடயம் குறித்து அப்பகுதி மக்கள் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் (Pillayan) முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க குருமண்வெளி துறையிலிருந்து குறித்த பேருந்து சேவை மகிழூர், எருவில், கிராமங்களுடாக மட்டக்களப்பு வைத்தியசாலை வரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்து போக்குவரத்து சேவையின் ஆரம்ப நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலரும் இணைந்திருந்தனர்.

மே தினம், மக்கள் ஆட்சிக்காக மக்கள் அணிதிரளும் நாள்: டில்வின் சில்வா வலியுறுத்தல்

மே தினம், மக்கள் ஆட்சிக்காக மக்கள் அணிதிரளும் நாள்: டில்வின் சில்வா வலியுறுத்தல்

மீண்டும் ஆரம்பம்

யுத்தகாலத்தின் போது குறித்த பேருந்து சேவை இடம்பெற்று வந்தபோதிலும் பின்னர் அது நிறுத்தப்பட்டிருந்தது.

மட்டக்களப்பில் யுத்த காலத்தின்போது நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் | Ctb Bus Service In Batticaloa

இதனால், அப்பகுதி மக்களும், குருமண்வெளி - மண்டூர் படகுப் பாதையைப் பயன்படுத்திவரும் பயணிகளும், விவசாயிகளும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், தற்போது இப்போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதையடுத்து அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதோடு இச்சேவையை ஏற்படுத்தியுள்ள இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சாதாரண தரப் பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026