எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் கியூபா: ரஷ்யா கடும் எச்சரிக்கை

United States of America Cuba World Russia Venezuela
By Shalini Balachandran Feb 10, 2026 10:42 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

கியூபாவின் எரிபொருள் தட்டுப்பாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.

இந்தநிலையில், தனது நாட்டின் அரசியல் உறுதியைக் குலைக்க அமெரிக்கா கொடூரமான மற்றும் சுவாசிப்பையே முடக்கும் உத்திகளைக் கையாளுவதாகக் கியூபா குற்றம்சாட்டியுள்ளது.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, வெனிசுலாவிலிருந்து கியூபாவிற்கு வரும் எரிபொருள் கப்பல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடுத்து நிறுத்தினார்.

யாழில் துப்பாக்கிசூட்டில் பலியான சிறுவன் பயணித்த வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட வாள்

யாழில் துப்பாக்கிசூட்டில் பலியான சிறுவன் பயணித்த வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட வாள்

கியூபாவிற்கு எரிபொருள்

அத்தோடு, கியூபாவிற்கு எரிபொருள் வழங்கும் மெக்சிகோ போன்ற நாடுகளின் மீது வர்த்தக வரிகளை (Tariffs) விதிப்போம் என அமெரிக்கா எச்சரித்தமை கியூபாவின் பொருளாதாரத்தை முடக்கும் நிலைக்குத் தள்ளியது.

இந்தநிலையில், கியூபாவின் நிலைமை உண்மையிலேயே மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் கியூபா: ரஷ்யா கடும் எச்சரிக்கை | Cuba Fuel Crisis Us Sanctions Russia Warning

இதனுடன், மாஸ்கோ இதற்கான தீர்வுகளைக் காண ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், கியூபா மக்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே தீர்மானிக்க வேண்டும் எனத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி எங்கே..!

ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி எங்கே..!

விமானங்களுக்கு எரிபொருள் 

எரிபொருள் தட்டுப்பாட்டினால் நாடு முழுவதும் மின்சாரம் மற்றும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கியூபா அரசு அவசரகால நடவடிக்கையாக அரசு நிறுவனங்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் வேலை, பல்கலைக்கழகங்கள் மூடல் மற்றும் பாடசாலைகளின் வேலை நேரம் குறைப்பு போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேலும், சர்வதேச விமானங்களுக்கு எரிபொருள் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏர் கனடா நிறுவனம் தனது கியூபா சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் கியூபா: ரஷ்யா கடும் எச்சரிக்கை | Cuba Fuel Crisis Us Sanctions Russia Warning

மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் ஆகியோர் அங்கு நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்துக் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது கியூபா மக்களின் மன உறுதியை உடைக்க எடுக்கப்படும் கொடூரமான ஆக்கிரமிப்பு என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரி20 உலககிண்ணம்: இலங்கை அணிக்கு பேரிடி : முக்கிய வீரர் வெளியேற்றம்

ரி20 உலககிண்ணம்: இலங்கை அணிக்கு பேரிடி : முக்கிய வீரர் வெளியேற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026