அமெரிக்கா விதித்த தடை: தக்க சமயத்தில் உதவிய ரஷ்யா:நன்றி தெரிவித்த நாடு
தொடர்ச்சியான எரிசக்தி பற்றாக்குறை நிலவும் சூழலில், ஒரு ரஷ்ய எண்ணெய்க் கப்பல் கியூபா துறைமுகத்திற்கு கச்சா எண்ணெயை கொண்டு சென்று வழங்கியதை அடுத்து, கியூபாவின் வெளியுறவு அமைச்சகம் செவ்வாயன்று நன்றி தெரிவித்ததுடன், இந்த விநியோகம் மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டது.
"கியூபா துறைமுகத்திற்கு ரஷ்ய எண்ணெய்க் கப்பல் வந்தடைந்ததற்கு, ரஷ்ய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அவர்களின் ஒற்றுமையான ஆதரவிற்காக நாங்கள் நன்றி கூறுகிறோம்," என்று அந்த அமைச்சகம் சமூக ஊடக தளமான X-இல் தெரிவித்துள்ளது.
உதவுவது எமது பொறுப்பு
"கியூபா மக்களை நெரிக்க முற்படும் அமெரிக்கா விதித்துள்ள எரிசக்தித் தடைக்கு மத்தியில் இந்த மதிப்புமிக்க உதவி வந்துள்ளது."

"தனது நட்பு நாடு எரிபொருள் பற்றாக்குறையால் அவதிப்படும்போது மொஸ்கோவால் சும்மா இருக்க முடியாது என்பதால், கியூபாவிற்கு அத்தியாவசிய எரிசக்தி வளங்களை வழங்குவதில் உதவுவது தனது பொறுப்பு என்று ரஷ்யா நம்புவதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் திங்களன்று தெரிவித்தார்.
ட்ரம்பின் நிலைப்பாடு
ரஷ்ய எண்ணெய்க் கப்பல் கியூபாவை நெருங்கிய நிலையில், அந்தத் நாட்டிற்கான எரிபொருள் விநியோகத்தின் மீதான நடைமுறைத் தடையை அமுல்படுத்தப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

"யாராவது ஒரு பெரிய கப்பலில் பொருட்களை ஏற்றிக் கொண்டு வருவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, ஏனென்றால் அவர்கள் பிழைக்க வேண்டுமே. நான் அவர்களிடம் சொன்னேன், இப்போது ஒரு நாடு கியூபாவிற்கு எண்ணெய் அனுப்ப விரும்பினால், அது ரஷ்யாவாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை," என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஒரு ரஷ்ய எண்ணெய் கப்பலை கியூபாவிற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்ல அனுமதிப்பது, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக் கொள்கையில் மாற்றத்தைக் குறிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை திங்களன்று கூறியது.
730,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெய்
அந்த கப்பல் சுமார் 730,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்றுள்ளது. எரிபொருள் இருப்பு தீரும் வரை, இது கியூபாவிற்கு குறைந்தது பல வாரங்களுக்குத் தேவையான அளவு ஆகும்.

வெனிசுலாவிலிருந்து தொடர்ச்சியான எரிபொருளை பெற்றுவந்த கியூபாவிற்கு அண்மையில் அந்நாட்டு ஜனாதிபதியை கைது செய்து அமெரிக்கா கொண்டு சென்ற நிலையில் வெனிசுலாவிலிருந்து எரிபொருளை பெறுவதற்கு கியூபாவிற்கு அமெரிக்கா தடைவிதித்த நிலையில் தற்போது எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்