நேட்டோவில் இருந்து அமெரிக்கா விலகுவது குறித்து ட்ரம்ப் பரிசீலனை
நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
த டெலிகிராப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் டொனால்ட் ட்ரம்ப் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ கூட்டணியை ஒரு காகிதப்புலி என்று குறிப்பிட்ட ட்ரம்ப், பிரித்தானியாவிடம் ஒரு கடற்படை கூட இல்லை என்றும் விமர்சித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய கடற்படை
அத்துடன் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்களுக்குப் பிறகு, இந்த அமைப்பில் அமெரிக்கா உறுப்பினராக நீடிப்பது குறித்து மீண்டும் பரிசீலிப்பீர்களா என வினவிய நிலையில், ஆம், அது மறுபரிசீலனைக்கும் அப்பாற்பட்டது என்று தாம் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

நான் ஒருபோதும் நேட்டோவால் ஈர்க்கப்படவில்லை எனவும் அவர்கள் ஒரு காகிதப்புலி என்பது எனக்கு எப்போதோ தெரியும் என்றும் அது ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கும் நன்கு தெரியும் என கூறியுள்ளார்.
இதேவேளை பிரித்தானியாவிடம் கடற்படை கூட இல்லை எனவும் நீங்கள் மிகவும் பழமையாகிவிட்டீர்கள், என கடுமையாக ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி நேட்டோ நாடுகளின் உதவியை கோரியிருந்த நிலையில் அவரது அழைப்பு நேரடியாகவே நேட்டோ நாடுகள் நிராகரித்த நிலையில், ட்ரம்ப் நேட்டோ நாடுகளை இவ்வாறு விமர்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்