சன்ரைசர்ஸ் அணியின் தோல்விக்கு காரணம் இதுவே: வெளிப்படையாக கூறிய அணி தலைவர்
2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோசமாக தோல்வியடைந்தது.
முக்கியமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது நேற்றையதினம் (26) பந்து வீச்சில் சன்ரைசர்ஸ் அணியை நிலைகுலைய செய்தது.
ஆடுகளம்
இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணியின் மோசமான தோல்விக்கான முக்கிய காரணத்தை அந்த அணியின் தலைவரான பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் போட்டிக்காக தயாரிக்கப்பட்டிருந்த ஆடுகளம் "தந்திரமானதாக" இருந்ததாக கம்மின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய காரணம்
இறுதிப் போட்டியின் கருப்பு நிற மண் கொண்ட ஆடுகளம் தயாரிக்கப்பட்டு இருந்ததாகவும் அது போன்ற ஆடுகளங்கள் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்ததே மிகப்பெரிய தவறு எனவும் ஆடுகளத்தை அணி முறையாக கவனிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுவே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என கம்மின்ஸ் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |