வீரியம் கொண்டுள்ள புதிய வைரஸ்! முடக்கப்படுமா ஸ்ரீலங்கா? பொலிஸ் பேச்சாளர் தகவல்
curfew
srilanka
ajith rohana
By Vasanth
ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டால், அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நாட்டை முடக்குவதற்கு தீர்மானிக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தேசிய கொவிட் செயற்பாட்டு மையம் கூடும்போது இந்த பிரச்சினை குறித்து நாளை விவாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தொற்றுநோயியல் பிரிவு நிலைமையை ஆய்வு செய்து வருவதாகவும் அதன் பின்னர் இந்த விடயம் தொடர்பாக எடுக்க வேண்டிய தீர்மானம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.