தளர்வுக்கு தயாராகும் இலங்கை - தயாரானது விசேட சுகாதார வழிகாட்டி
covid
curfew
lift
guide
By Vanan
பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான விசேட சுகாதார வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படும் என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சுகாதார வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் ஏற்பாட்டாளர் நிலந்த ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (23) தம்புள்ளை நகரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் 50,000 ரூபா பெறுமதியாக நிவாரணமொன்றை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.