மற்றுமொரு பகுதிக்கு விதிக்கப்பட்டது பயணத்தடை
srilanka
corona
lock down
By Vasanth
அனுராதபுரத்தில் தேவநம்பியதிஸ்ஸ பகுதியின் முதல் கட்டத்திற்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள பத்து பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை காரணமாக இந்த நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அனுராதபுர நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அவர்களது நண்பர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் அனுராதபுரம் - தேவநம்பியதிஸ்ஸபுர, 295 ஏ கிராம சேவகர் பிரிவு (திசாவேவ பகுதி 01) இந்த உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி