அமெரிக்கா வெளியிட்ட பட்டியல்..! இந்தியா விடுதலை - சீனாவுக்கு இறுக்கம்
அமெரிக்காவின் நிதிக்கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லன் டெல்லியில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிதிக்கண்காணிப்பு பட்டியல்
இத்தாலி, மெக்சிகோ, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளும் அமெரிக்காவின் நிதிக்கண்காணிப்பு பட்டியலில் இருந்து விலக்கு பெற்றுள்ளன.
சீனா, ஜப்பான், ஜெர்மனி, கொரியா, மலேசியா, சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகள் தொடர்ந்தும் நிதிக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா தனது தொழில் வர்த்தகம் அதிக அளவில் நடைபெறும் நாடுகளின் பணப்பரிவர்த்தனைகள் , நிதிக் கொள்கை மற்றும் பொருளாதார நிலவரங்களைக் கண்காணிக்க நிதிக்கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருதரப்பு வர்த்தக உபரி
கணிசமான இருதரப்பு வர்த்தக உபரியின் காரணமாக, அமெரிக்க கருவூலத் துறை இந்தியாவை நாணயக் கண்காணிப்புப் பட்டியலிலிருந்து (Currency Monitoring List) நீக்கி, நாணய கையாளுவோரின் கண்காணிப்புப் பட்டியலில் (Currency Manipulator watchlist ) தற்போது சேர்த்துள்ளது.
தொற்றுநோய் காலம் தொடங்கியதிலிருந்து இந்தியா இப்பட்டியலில் இடம்பிடிப்பது இது மூன்றாவது முறையாகும்.
இதனால் அமெரிக்காவிற்கு இந்தியா மீதான பொருளாதார சந்தேகத்தன்மை நீக்கியுள்ளது உறுதி. மேலும் இந்த மாற்றத்தால் இந்திய - அமெரிக்க வணிகம் என்பது மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.