நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் பாரிய பிரச்சினை - எச்சரிக்கிறார் நிதி அமைச்சர்
தற்போதைய நிலைமை இப்படியே நீடித்தால் எதிர்காலத்தில் நாடு பாரிய உணவு தட்டுப்பாட்டைச் சந்திக்க நேரிடும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்தராஜபக்ச (Mahinda Rajapaksa) தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ் அமைச்சரவைக் கூட்டத்தில் உர நெருக்கடி தொடர்பிலான விடயங்கள் கலந்துரையாடப்பட்து.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பெரும் போகத்தில் பயிரிடப்பட்ட நிலங்களில் மூன்றில் ஒரு பகுதி மாத்திரமே பயிர்ச்செய்கைக்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார் .
இந்நிலையில் குருநாகல் மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் மட்டுமே நெல் மற்றும் ஏனைய பயிர் செய்கைகளுக்காக வெற்றிகரமாகத் தயார் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் புள்ளி விபரங்களுடன் சுட்டிக் காட்டியுள்ளார்.