மக்களின் நம்பிக்கையை வென்றுள்ள ரணில் அரசு - வெளியான ஆய்வு..!
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை 11 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இந்த விடயம் Verite research நிறுவனம் நடத்திய ஆய்வில் வெளியாகியுள்ளது.
இந்த வருட பெப்ரவரி மாத நிலவரத்தை விட, ஜூன் மாத நிலவரத்திற்கமைய இந்த அதிகரிப்பு தெரிய வந்துள்ளது.
மக்களின் நம்பிக்கை

இந்த ஆய்விற்கமைய, நாட்டில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மக்கள் திருப்தி அடைந்து வருகின்றனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 4 சதவீதம் மக்கள் தற்போதைய ரணில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் திருப்தியை வெளியிட்டிருந்தனர்.
ஆனால் தற்போது ஜூன் மாதத்தில் 12 சதவீதம் மக்கள் திருப்தி அடைந்துள்ளனர்.
குறித்த கணக்கெடுப்பின்படி, நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளதாக 8 சதவீத மக்களும், நாட்டின் பொருளாதாரம் சிறந்த நிலையில் உள்ளதாக 26.6 சதவீத மக்களும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.