அனுரமேனியா சோசல்மீடியா அடியவர்களின் அலப்பறைகள்!
அல்லைப்பட்டி பகுதியில் ஊர்காவற்துறை காவற்துறை மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பலியானவரின் உடலம் இன்று உறவினர்களின் போராட்டத்துடன் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.
உடலத்துடன் வீதியில் இறங்கிய உறவினர்கள் கொல்லப்பட்டவருக்கு நீதிகோரி போராடி வழுக்கையாற்று இடுகாட்டு நிலத்தில் அவரைப்புதைத்தனர்.
தமது ரவையால்கொல்லபட்ட அல்பினோ அருள் ஃபயஸ் 17 வயதானவர் அல்ல அவர் 19 வயதுக்காரர் என சிறிலங்கா காவற்துறை நேற்று அவரது வயதை அதிகரித்துக்காட்டத்தலைப்பட்டாலும் அது பொய் என்பது அம்பலப்படுத்தபட்டது.
இந்த சம்பவத்தில் மீண்டும் திரும்பப்பெற முடியாதபடி ஒரு உயிர்போயுள்ள நிலையில் மேற்குலக நாடுகளில் இருந்து அநுரமேனியாவின் நவ அடியவர்களின் ஜால்ரா அடிப்பு பொழிப்புரைகளும் சகட்டுமேனி பல்லவிகளுக்கும் சகிக்க முடியாதபடி செல்கிறது.
நரிகள் வலம் போனால் என்ற இடம்போனால் என்ன மேலேவிழுந்து பிறாண்டாமல் இருந்தால் சரிதான் என சொல்லிக்கொள்வார்கள். அதுபோல இவ்வாறான இன்புளுவன்சர்கள் அவ்வப்போது வலசை போகும் பாணியில் அனுரவை ஆதரிக்கலாம்;, ரணிலை ஆதரிக்கலாம். அது அவர்களின் இன்புளுவன்ஸ் பணியாக கடவட்டும்.
ஆனால் இவ்வாறான சோசல்மீடியாக்காரர்கள் மேற்குலக நாட்டின் மனித உரிமை வரப்பிரசாதங்களை அனுபவித்த படியே சிறிலங்கா காவற்துறை போன்ற ஓட்ரோறித்திய அதிகாரத்துவ நகர்வுகளுக்கு தாளம் போட்டு, காவற்துறைக்கு நிற்காத வாகன சாரதிகளின் மூளையை துப்பாக்கி ரவை துளைக்கும் என்ற கருத்து நியாயப்படுத்தலாக உள்ளது.
எந்த நாடு என்றாலும் காவற்துறை நிறுத்தச்சொன்னால் வாகனத்தை நிறுத்;தவேண்டும் என்பது சட்டம் ஒழுங்கின் அடிப்படைப்புரிதல் என்பதால் தமிழர்களுக்கு இந்த இன்புளுவன்சர்களின் அதிக பொழிப்புரைகள் தேவையில்லாத நிலையில் இந்த விடயங்களை தொட்டுவருகிறது செய்திவீச்சு..
நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி - ஈகைப்பேரொளி முருகதாசனுக்கு ஐ.பி.சி தமிழின் இதயம் கனிந்த நினைவேந்தல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |