கருகருவென்று காடு போல முடி வளர இதை செய்யுங்கள்
முடியை சுத்தம் செய்வது, முடிக்கு கண்டிஷனர் போடுவது, முடியை உலர வைப்பது, முடியை ஸ்டைல் செய்வது என ஒவ்வொன்றுக்கும் ஏற்ற முடி தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும்.
அந்த வகையில், கறிவேப்பிலை, அரிசி மாவு மற்றும் வெந்தயம் சேர்த்து தயார் செய்த ஹேர் மாஸ்க் முடியின் வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்வதை தடுக்கிறது.
வீட்டில் உள்ள 3 பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த ஹேர் மாஸ்க் முடி உதிர்வு பிரச்சனையை நீக்க உதவுகிறது. அதை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
ஊற வைத்த வெந்தயம் - 3 டீஸ்பூன்
ஹேர் மாஸ்க் செய்வது எப்படி
அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கலக்கவும். இப்போது அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
மிதமான சூட்டில் கைவிடாமல் கிளறி விட வேண்டும். மாவு கட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும்.
இதற்கிடையில் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை ஆறவைத்த அரிசி மாவில் சேர்த்து நன்கு கலந்தால் ஹேர் மாஸ்க் தயார்.
முடியின் மேல் முதல் நுனி வரை பூசி 20 நிமிடங்களுக்கு பின்னர் முடியை அலசவும்.
இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை என மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி வர முடி வளர்ச்சியில் மாற்றம் தெரியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
