மாவை ஒரு நன்றிகெட்ட பயல்!! திட்டித்திரியும் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்!!
‘மாவை ஒரு நன்றிகெட்ட பயல்..’ என்று தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரான சி.வி.கே. சிவஞானம் தனக்கு நெருங்கியவர்களிடம் புலம்பித்திரிவதாக கட்சி வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.
‘மாவைக்காக எத்தனையோ காரியங்களைச் செய்திருக்கின்றேன்… மாவைக்காக எத்தனையோ அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன்… மாவைக்காக எத்தனையோ பேரைப் பகைத்திருக்கின்றேன்… ஆனால் மாவையோ தற்பொழுது என்னை ஓரம்கட்டி வருகின்றார்... அவர் ஒரு நன்றி கெட்ட பயல்..’ என்று சி.வி.கே. சிவஞானம் கூறிவருகின்றார்.
யாழில் நடந்த தமிழரசுக் கட்சியின் இரகசியக் கூட்டத்திற்கு தான் அழைக்கப்படவில்லை என்றும், பல்வேறு சந்திப்புக்களுக்கு அழைக்கப்படாமல் தான் ஓரங்கட்டப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
மாவை ஒரு முதுகெலும்பு இல்லாத தலைவர் என்றும், தமிழரசுக் கட்சியின் சவப்பெட்டிக்கு மாவை ஆணி அடித்துவிட்டதாகவும் அவர் புலம்பியிருக்கின்றார்.
விரைவில் தான் கட்சிப் பணிகளில் இருந்து முழுவதுமாகவே ஒதுங்க இருப்பதாகவும், எதிர்வரும் 12ம் திகதி நடைபெற இருக்கின்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தைத் தான் புறக்கணிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துவருகின்றார்.
தமிழரசுக் கட்சியைவிட்டு தான் வெளியேறும் முன்பதாக தனது உள்ளக்குழுறல்களை ஒரு அறிக்கையாகத் தயாரித்து பகிரங்கமாக வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரான சி.வி.கே. சிவஞானம் ஒரு நேர்மையான, தமிழ் தேசியப்பற்றுள்ள மனிதர். தேசியத் தலைவரால் பாராட்டப்பட்ட ஒரு தலைவர். தமிழரசுக் கட்சியில் இருந்து தமிழ் தேசியவாதிகளை களையெடுக்கும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக அவரது வெளியேற்றம் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் கட்சி உறுப்பினர்கள் பேசிக்கொள்கின்றார்கள்.
சிவஞானம் ஐயா கூறுவதுபோல தமிழரசுக் கட்சியை சவமாக்கி, சவப்பொட்டியில் போட்டு, அந்தச் சவப்பெட்டிக்கு ஆணியடித்துவிட்டார்கள் என்பது உண்மையா?
ஆணி அடித்தவர்களில் ஒருவர் மாவை ஐயா. மற்றவர்கள் யார்???
'சொன்னாலும் குற்றத்தை' தவறாமல் பாருங்கள்... தெரியவரும்
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)