தமிழரசுக் கட்சி ஒன்றும் சில்லறை கட்சி இல்லை : எச்சரித்த சி.வி.கே சிவஞானம்
தமிழரசு கட்சியொன்றும் சில்லறை கட்சி கிடையாது எனவும், கட்சியை ஒரு போதும் கீழே தள்ள முடியாது எனவும் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் (C.V.K.Sivagnanam) கடுமையாக சாடியுள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்திருந்தார்.
உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதாக தெரிவித்து சி.வி.கே சிவஞானத்தினால் தமிழ் கட்சிகளுக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டிருந்தது.
தமிழ் தேசிய கூட்டணி
இந்தநிலையில், குறித்த கடிதத்திற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர் த. சித்தார்த்தன் (Dharmalingam Siddarthan) தங்களது சார்பில் நேற்று (03) பதில் கடிதத்தை அனுப்பி இருந்தார்.
குறித்த கடிதத்தில், “கடந்த நாடளுமன்றத் தேர்தலில் ஐந்து கட்சிகளாக இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக போட்டியிட்ட நாம், நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியத்தின் இருப்புக்கு மிகவும் அவசியமான ஒற்றுமை எனும் விடயத்தை மேலும் வலுவானதாக்க சாத்தியமான வகையில் மேலும் சில அமைப்புகளை இணைத்துப் பயணிக்க தீர்மானித்து தொடர்ச்சியாக மேற்கொண்ட செயற்பாடுகளின் பலனாகவே இன்று பல கட்சிகள் இணைந்த கூட்டணியொன்றை உருவாக்க முடிந்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் சம்பந்தமாக நடைமுறைச் சாத்தியமான வகையில் எமது கூட்டணியுடன் பேச்சுக்களை நடாத்தக் கூடிய தீர்மானம் ஒன்றை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு மேற்கொண்டு அறியத் தருவீர்களானால் அது பற்றி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்றுக் குழுவில் பேசி சாதகமான பதிலை தங்களுக்கு அறியத் தரமுடியும்” என அவர் தெரிவித்திருந்தார்.
தமிழ் கட்சி
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சி.வி.கே சிவஞானம் “நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளை இணைத்து போட்டியிட மாத்திரம்தான் தாயாரே தவிர எந்த கட்சிகளுடனும் தமிழரசு கட்சி கூட்டணி அமைக்க தயாரில்லை.
தமிழ் மக்களின் நலனுக்காகத்தான் நாங்கள் இது தொடர்பில் கலந்துரையாட இருந்தோமே தவிர, இதற்காக தமிழரசு கட்சியை யாரும் சில்லறை கட்சி என என்ன கூடாது.
ஆனால் அவ்வாறு எண்ணியதால்தான் இன்று நாங்கள் கூட்டணி அமைத்து விட்டோம் நீங்கள் மத்தியக்குழுவுடன் கதைத்து விட்டு வாருங்கள் என சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
தங்களிடம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பெருபான்மை என்பதால் எங்களை மலினப்படுத்தலாமா ? இதில் நாகரீகம் உண்டா ?
எட்டுடன் ஒன்பதாக இந்த கூட்டணியுடன் போவதா என்று சித்தார்தனுக்காக நான் மத்தியக்குழுவிடம் கேட்டு ஒன்பதாம் திகதி அறிவிக்கின்றேன்” என அவர் கடுமையாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 10 மணி நேரம் முன்
