காவல்துறைக்கு ஆட்டம் காட்டும் இஷாரா : தகவல் வழங்குபவர்களுக்கு இலட்சம் ரூபா சன்மானம்
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Raghav
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையை அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, ரூ.10 இலட்சமாக இருந்த பரிசுத் தொகை தற்பொழுது ரூ.12 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரகசியத்தன்மை
மேலும் தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இஷாரா செவ்வந்தி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்திருந்தால், அதனை அறியப்படுத்துவதற்குப் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. பணிப்பாளர், கொழும்பு குற்றவியல் பிரிவு - 071 859 1727
2. கொழும்பு குற்றவியல் பிரிவின் கட்டளைத் தளபதி - 071 859 1735
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 4 மணி நேரம் முன்

ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
6 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி